அஜித்தின் துணிவு திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.!

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹிரோயினாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தாய்லாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

நீண்ட நாட்களாக துணிவு படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் இந்த படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஷ்டருடன் வெளியானது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும் அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் பொங்கல் தினத்தன்று ஒன்றுடன் ஒன்று மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீரம், ஜில்லா படத்திற்கு பிறகு அஜித் விஜய் மீண்டும் நேருக்கு நேர் மோதும் போகும் இந்த திரைப்படங்கள் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியாகிய நிலையில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே துணிவு திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறிவந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு மீதம் உள்ளதால் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போனதாக கூறப்படுகிறது விரைவில் துணிவு படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment