எதிர் நீச்சல் சீரியலில் இருந்து திடீரென விலகும் பிரபல நடிகை.! இனிமேல் அவருக்கு பதில் இவர்தான்..

ethir nichal
ethir nichal

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்த டிஆர்பி-யிலும் முன்னணி வகித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் எந்த சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை விலகி இருப்பதாகவும் அவருக்கு பதில் தற்பொழுது புதிய நடிகை அறிமுகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எதிர்நீச்சல் சீரியலில் தங்களுடைய மனைவிகளை அடிமைப்படுத்தி வரும் கணவர்கள் தங்களுடைய அண்ணன் சொல்வதை மட்டுமே கேட்டு வருகிறார்கள்.

அந்த அண்ணனும் எப்படியாவது மொத்த சொத்தையும் தன் வயப்படுத்த வேண்டும் என்பதற்காக தம்பிக்கு எதிராக செயல்பட்டு நடித்து வருகிறார். எனவே அந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கம் பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் அதனை ஒடுக்க வேண்டும் என அவர்களுடைய மனைவிகள் போராடுகிறார்கள். அதாவது அதிகம் படித்த பெண்களை தேடி திருமணம் செய்து கொண்டவர்கள் தற்பொழுது அவர்களை வைத்து வீட்டு வேலையை வாங்குகிறார்கள்.

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருந்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கடைசி மருமகளாக ஜனனி இந்த வீட்டிற்கு வருகிறார். தற்பொழுது இவர்தான் இந்த தன்னுடன் இருக்கும் மற்ற பெண்களையும் ஊக்கப்படுத்துகிறார். அதாவது பல பெண் புரட்சி வசனங்களும் சமீப காலங்களாக இடம் பெற்று வருகிறது.

yethirnichal
yethirnichal

எனவே இது குடும்ப இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் டிடியின் அக்கா பிரியதர்ஷினி நடித்த வரும் நிலையில் தற்போது அவர் இந்த சீரியலில் இருந்து விலக இருக்கிறார் தற்பொழுது அவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை பானுமதி மாற்றப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாக ரசிகர்கள் இதனை ஏற்க மறுத்து வருகின்றனர்.