விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.! என்ன நடக்குது என்று தெரியாமல் முழிக்கும் இயக்குனர்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும் வாரிசு திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் மற்றும் நடன காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாக தகவல்களை ஆகியுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் தளபதி 67. வாரிசு திரைப்படத்தை விட தளபதி 67 திரைப்படத்திற்காக தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் தளபதி 67 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் உருவாகியுள்ள தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன்,  பிரித்திவிராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்டோர் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக  நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது கில்லி படத்தில் பிறகு இந்த கூட்டணி இணை உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் தளபதி 67 திரைப்படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக கமிட் ஆகியுள்ள பிரித்திவிராஜ் அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடிக்க வேறொரு மலையாள நடிகரை தேர்வு செய்துள்ளாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அதாவது பிரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் நிவின் பாலியை தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர் மத்தியில் மேலும் ஒரு எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அது மட்டுமல்லாமல் தளபதி 67 குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment