பில்லா படத்தில் இவர் நடித்தால் மட்டும் தான் சூப்பராக இருக்கும்.! அஜித்துக்கு சிபாரிசு செய்த முன்னணி நடிகர்.

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகள் தாண்டி 50 ஆண்டுகள் வரை சூப்பர் ஸ்டாராக நிலைத்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்க பல முன்னணி நடிகர்கள் பல ஆண்டுகளாக ஆசைப்பட்டு வருகிறார்கள். இந்த போட்டியில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் விஜய் இவர்கள் ஆசைப்படுகிரார்களோ இல்லையோ இவர்களின் ரசிகர்கள் தங்களின் அபிமான நடிகர்களை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி அழைத்து வருகிறார்கள்.

ஆனால் ரஜினிகாந்துக்கு மிகவும் நெருக்கமான நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார் தான் இதை பலமுறை ரஜினிகாந்த் அவர்கள் சொல்லாமல் சொல்லி உள்ளார். சமீபத்தில் கூட இதை பிரபல சினிமா விமர்சகர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆம் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்த பயில்வான் ரங்கநாதன் அவர்கள் இந்த விஷயத்தை புட்டு புட்டு வைத்துள்ளார்.

அவர் கூறியிருப்பது  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் அபார சாதனை படைத்தது. இந்த படத்தை தயாரித்த பாலாஜி மறுபடியும் அதே பில்லாவை தயாரிக்க வேண்டும் என்று ரஜினிகாந்திடம் கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் பாலாஜி அவர்கள் ரஜினியிடம் நீங்கள் தற்போது பிஸியாக இருக்கிறீர்கள் இதனால் பில்லா படத்தை வேறொரு நடிகரை வைத்து உருவாக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதற்கு ரஜினிகாந்த் அவர்கள் தான் பில்லா படத்தில் அஜித் குமாரை போடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதை ஒரு பேட்டியில் பாலாஜி அவர்களே கூறியுள்ளார். அந்த அளவிற்கு ரஜினியின் அபிமான நடிகராக இருந்து வருகிறார் அஜித். அதுமட்டுமல்லாமல் ரஜினி அவர்கள் பாலாஜியிடம் அஜித்தை நடிக்க வையுங்கள் என்று கூறியது அஜித் அவர்களுக்கே தெரியாதாம். இந்த தகவலை  சினிமா பிரபலம் ஒருவர் ஒரு youtube சேனலில் கூறியுள்ளார்.

Leave a Comment