விஜய் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பிரபல நடிகர் – யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம்.!

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப கதையாக உருவாகி வருகிறது.

இருந்தாலும் இதில் ஆக்சன் சீன்களும் இடம்பெறும் என படத்தின் தயாரிப்பாளரும் மற்றும் படத்தில் நடித்து வரும் சரத்குமார் ஏற்கனவே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பூ, சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் உடன் கைகோர்க்க இருக்கிறார் அதனை தொடர்ந்து பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் விஜய் கை கோர்ப்பதால் அவரது மார்க்கெட் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது விஜய் படங்களில் தொடர்ந்து ஒரு நடிகர் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்க கூடியது ரொம்ப கஷ்டம் ஆனால் ஒரு நடிகர் மட்டும் தொடர்ந்து நான்கு படங்களுக்கு மேலாக விஜய் படத்தில் நடித்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அந்த நடிகர் வேறு யாரும் அல்ல யோகி பாபு தான்.

யோகி பாபு மெர்சல், சர்க்கார், பிகில், பீஸ்ட் இப்பொழுதும் வாரிசு படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார் விஜய்யும் யோகி பாபுவும் கைகோர்த்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அந்த வகையில் இந்த படமும் ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Comment