பொங்கல் ரேஸில் இருந்து ஜகா வாங்கும் பிரபல நடிகர்.! இது தெரிஞ்ச கதைதானே..

பொங்கல் அன்று ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது இது குறித்த தகவல் தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. பொதுவாக சினிமாவை பொருத்தவரை ரசிகர்கள் பொங்கல், தீபாவளி இது போன்ற நாட்களில் திரைப்படங்கள் வெளிவந்தால் அதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது அஜித், விஜய் படங்கள் பொங்கல் அன்று களமிறங்க இருக்கிறது. எனவே சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் தங்களுடைய சண்டைகளை துவங்கி இருக்கிறார்கள் எனவே இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.

ராமாயண கைதியை மையமாக உருவாக்கியுள்ள இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை கிரித்தி சனோன் நடித்திருக்கிறார். இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் ட்ரால் மெட்டீரியலாக மாறி உள்ளது எனவே இது குறித்து போஸ்டர்களை ரசிகர்கள் மிகவும் மோசமான கிராபிக்ஸ் காட்சிகளை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

குழந்தைகள் பார்க்கும் சேனல்களின் லோகோவுடன் டீசரின் காட்சிகள் மற்றும் மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது இவ்வாறு தற்பொழுது ஆதிபுரூஷ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கேள்வி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக ஆதிபுரூஷ் படம் பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்து இருந்த நிலை தற்பொழுது அதில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பட குழுவினர்கள் மோசமான கிராபிக் காட்சிகளை தூக்கி விட்டு குவாலிட்டியாக இருக்கும் காட்சிகளை கொண்டு வருவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள் இதன் காரணமாக இந்த படம் பொங்கல் அன்று வெளியாகாது. இந்த படம் சுமார் ரூப500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது எனவே பொம்மை கார்டூனுக்கு இவ்வளவு செலவு செய்திருக்கிறார்களா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த படம் 2023 ஏப்ரலில் இந்த படத்தை வெளியிட டெட்லைன் வைத்து பட குழுவினர்கள் தற்பொழுது பணியாற்றிய வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment