தீபாவளையில் தளபதி ரசிகர்களுக்கு டபுள் ஷாட்.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்து உள்ள நிலையில் தற்போது தீபாவளி அன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருப்பதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்பவுடன் கூறப்பட்டுள்ளது. வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா அவர்கள் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் பிரபு, சத்யராஜ், உள்ளிட்ட பலர் நடித்துவரும் இந்த திரைப்படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதனை தொடர்ந்து தீபாவளி அன்று வாரிசு திரைப்படத்தின் சிங்கிள் பாடல்  வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் அவர்கள் ஒரு டிவிட்டை பதிவு செய்துள்ளார் அதாவது தமன் அவர்கள் அட்டகாசமான போஸ் உடன் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார் இதனை அடுத்து அவர் மறைமுகமாக தீபாவளிக்கு சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதை உறுதி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக இவர்கள் இருவரும் தளபதி 67 திரைப்படத்தில் இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Leave a Comment