விஜய் வீட்டு கதவை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறிய பள்ளி மாணவி.! வைரலாகும் சிசிடிவி காட்சி…

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பாதி முடிவடைந்த நிலையில் இன்னும் 60 நாள் ஷூட்டிங் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் காஷ்மீரில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நிலையில் அவருடைய வீட்டின் முன்பு பள்ளி மாணவி ஒருவர் கேட்டை கட்டி பிடித்துக் கொண்டு கதறும் வீடியோ ஒன்றே தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் அவர்கள் தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக இருந்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. காஷ்மீரில் படபிடிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு தான் சென்னை திரும்ப இருக்கிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் 11வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் நடிகர் விஜய் பார்க்க வேண்டும் என்று அவருடைய இல்லத்திற்கு சென்று இருக்கிறார்.

அப்போது கேட் பூட்டியிருப்பதை பார்த்து அந்த பள்ளி மாணவி அங்கு இருந்த சிசிடிவி கேமராவை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார் அதன் பிறகு விஜயின் வீட்டு கேட்டை கட்டிப்பிடித்து அதன் பிறகு ஒரு சில நிமிடம் சிசிடிவி முன்பு ஏதோ ஒன்று பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதை எப்படியாவது விஜய் கண்முன்னே கொண்டு சேர்ப்பதற்கு ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது. 11ஆம் வகுப்பு படிக்கும் தமிழ்ச்செல்வி என்ற மாணவி விஜயின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார் அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று அவருடைய இல்லத்திற்கு வந்த தமிழ்ச்செல்விக்கு ஏமாற்றம் மட்டும் தான் கிடைத்தது.

இதனால் விஜயின் வீட்டு கேட்டின் முன்பு நின்று விட்டு புலம்பி விட்டு செல்கிறார் இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment