“அலைபாயுதே” படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் தேர்வானவர் ஒரு கிரிக்கெட் வீரர்.! கடைசியில் நடந்த குளறுபடி.

0
alaipayuthe
alaipayuthe

சினிமா உலகில் இருப்பவர்களையும் தாண்டி தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் கூட சினிமாவுலகில் கால்தடம் பதித்து அசத்துகின்றனர் அந்த வகையில் சடகோபன் ரமேஷ், ஹர்பஜன் சிங் எனத் தொடங்கி பலரும் தற்பொழுது சினிமாவில் வெற்றி கண்டு வருகின்றனர் குறிப்பாக விஷ்ணு விஷால், கார்த்தி ஆகியோரும் நடித்து அசத்துகின்றனர்.

ஆம் நடிகர் கார்த்தி இப்பொழுது பெரிய அளவு ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் , குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்துகிறார் அந்த வகையில் நடிகர் கார்த்தி யாரடி நீ மோகினி, மன்னர் வகையறா மற்றும் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2000-ம் ஆண்டு மாதவன் நடிப்பில் உருவான அலைபாயுதே படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அலைபாயுதே திரைப்படத்தை மணிரத்தினம் எடுத்திருந்தார் மற்றும் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஹீரோயினாக ஷாலினி நடித்திருந்தார்.

இந்த படம் அப்பொழுது வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது குறிப்பாக மாதவன் ஷாலினிக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆடிஷனில்  கார்த்தி கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டினார் இதன் மூலம் அலைபாயுதே..

படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை அவர் தான் பெற இருந்தார் ஆனால் அப்பொழுது அவர் ரொம்ப சின்ன பையனாக இருந்ததால் அவருக்கு குணச்சித்திர கதாபாத்திரம் கொடுத்துவிட்டு பின் மாதவனை ஹீரோவாக்கினார் சொல்லப்போனால் அலைபாயுதே படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்ததே கார்த்தி தானாம்.