தேசிய விருது வென்ற நடிகையிடம் சில்மிஷம் காட்டிய கல்லூரி மாணவன்.! காலேஜ் நிர்வாகம் கொடுத்த சரியான தண்டனை…

0
actress
actress

தமிழ் மற்றும் மலையாள ஆகிய மொழிகளில் பிஸியாக இருந்து வரும் நடிகை ஒருவர் தன்னுடைய படத்தின் பிரமோஷனிர்க்காக கேரளாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்று இருக்கிறார் அப்போது அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவர் அந்த நடிகையிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் அந்த காலேஜ் நிர்வாகம் அந்த மாணவனுக்கு சரியான தண்டனை கொடுத்து இருக்கிறது. அந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் எட்டு தோட்டக்கால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு சர்வம் தாளமயம், சூரரை போற்று, தீதும் நன்றும், வீட்ல விசேஷம், நித்தம் ஒரு வானம், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி சுதா கொங்கார இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தேசிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நடிகை அபர்ணா பாலமுரளி தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் பிரமோஷனிர்க்காக கேரளாவில் உள்ள சட்டக் கல்லூரிக்கு சென்று உள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி.

அந்த கல்லூரிக்கு சென்ற போது அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த விஷ்ணு என்ற மாணவன் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்தை கொடுத்து வரவேற்றுள்ளார். அந்த நேரத்தில் அபர்ணா தோல் மீது கை வைத்திருக்கிறார். அதன் பிறகு அபர்ணா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

அந்த மாணவனின் செயலை பார்த்து பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர் இந்த நிலையில் அந்த மாணவனை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது ஆனால் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

aparna balamurali
aparna balamurali