சூரியின் விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழா.? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக முதன்முறையாக அவதாரம் எடுத்த திரைப்படம் விடுதலை இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வருகின்ற 31ஆம் தேதி இந்த படம் திரையில் வெளியாக காத்திருக்கிறது இதனால் போஸ்ட்பிரேக்ஷன் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோஸ் சமீபத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சூரி அவர்கள் பல ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் விடுதலை படத்தின் டைம் டிவிரேஷன் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் சென்சார் போர்டு அறிவித்த சர்டிபிகேட் பற்றிய தகவலும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு 7 வழங்கப்பட்டிருப்பதால் இந்த படத்தை 18 வயதிற்கு உட்பட்டவர் பார்க்க முடியாது. ஆகையால் இந்த படத்தின் வசூல் பெரிய அளவில் அடி வாங்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. பல திரைப்படங்களில் காமெடி நடிகராக ஜொலித்து வந்த சூரி அவர்கள் தற்போது முதன் முறையாக கதாநாயகனாக நடித்த முதல் படமே அவருக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருப்பது என்று தான் சொல்ல வேண்டும்.

அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிகர் சூரி அவர்கள் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment