சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்.! அவருக்கு பதில் இனி இவர்தான்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதோட மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் விரைவில் அந்த சீரியல் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக ரொமான்டிக் காதல் சீன்கள் அதிகம் இடம் பெற மேலும் புதுமுக இளம் நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தி வெற்றினை கண்டு வருகின்றனர்.

இவ்வாறு இப்படிப்பட்ட சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி மக்களின் பெருமதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. அண்மையில் புதிதாக தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது தான் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அதாவது சுவாரசியமான கதைக்களத்துடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலின் ஜோடிக்கு மக்கள் மத்தியில் நல்ல ரேட்டிங் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயினாக முத்து-மீனா கேரக்டர் நடித்து வருகின்றனர். இதில் முத்து முரட்டுத்தனமாக பார்க்க இருந்தாலும் மிகவும் குழந்தை மனசு அனைவருக்கும் உதவி செய்யும் நல்ல குணம் கொண்டவர்.

முத்துவின் தம்பியான கௌதம் தனது அப்பாவின் ரிட்டயர்மெண்டுக்காக வந்த பணத்தை வாங்கிக் கொண்டு மீனாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். ஆனால் பணம் கிடைத்தவுடன் கௌதம் அதனை எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் ஓடி விடுகிறார் எனவே வேறு வழியில்லாமல் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் கௌதம் மீண்டும் வீட்டிற்கு வர அப்போதுதான் அவனுடைய காதலி பணத்தை ஏமாற்றிவிட்டு எடுத்து சென்றது தெரிய வருகிறது. எனவே முத்து கௌதமை வீட்டிற்குள் விடாமல் இருந்து வரும் நிலையில் பிறகு தனது பங்கு பணத்தை கொடுத்து விட வேண்டும் என அம்மாவின் மீது சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

இந்த நேரத்தில் கௌதம்க்கு அவருடைய அம்மா திருமணம் செய்து வைக்க ஆசைப்பட இதனால் பெண் பார்க்கின்றனர். எனவே முத்து எனக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு இது வேணாலும் செய்து கொள்ளலாம் என்ற சூழலில் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனின் சகோதரராக நடித்து வந்த யோகேஷ் தொடரில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக புதிய பிரபலம் ஒருவர் நடிக்க வந்துள்ளார்.

sirakattika aasai
sirakattika aasai
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment