மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சுறா தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் தான் ரசித்து பார்த்த நடிகர்களின் அறியாத பக்கங்களை பற்றி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். திரைக்குப்பின்னால் நிகழ்ச்சியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் எப்படி திரைத்துறையில் தனித்துவத்துடன் அறிமுகமானார் என்பது குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒரு புதுமையை செய்ய வேண்டும் என்று நிபந்தனை இருக்கிறது. அந்தவகையில் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ள அனைவருமே ஏதாவது ஒரு புதுமை படைத்தவர்கள் என்று கூறவேண்டும். அந்த வகையில் வர்த்தகத் துறை விளையாட்டுத்துறை, அறிவியல் துறை சினிமா துறை என எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற்றவர்களை கவனித்தால் அவர்கள் ஏதாவது ஒரு புதுமையை செய்திருப்பார்கள்.
அப்படி சினிமா துறையில் இருந்து ஒரு உதாரணத்தை உங்களுக்காக கூறுகிறேன் என கூறியுள்ளார் அந்தவகையில் புதுமையை செய்ததால் புகழ் பெற்ற இயக்குனராக வளர்ந்தார் என்பதை பற்றி பார்ப்போம். பாரதிராஜா அறிமுகமான திரைப்படம் என்றாலே அது 16 வயதினிலே திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி என பல முக்கிய பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.
மேலும் இந்த திரைப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் எஸ் ராஜ்கண்ணு தயாரித்திருந்தார். இன்றைய காலகட்டத்தில் ஒரு சில குறும்படங்களை இயக்கி விட்டு இன்று இயக்குனர்களாக வலம் வருகிறார்கள். அதேபோல் ஒரு சில இயக்குனர்கள் முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றிவிட்டு பின்பு இயக்குனராக அறிமுகமாகிறார். ஆனால் பாரதிராஜா பல இயக்குனர்களுடன் 12 வருடமாக உதவி இயக்குனராக பணியாற்ற பிறகுதான் முழுமையாக சினிமாவைக் கற்றுக் கொண்ட பிறகு இயக்குனராக அறிமுகமானார்.
கமலஹாசன் சினிமாவில் பிளேபாய் என்ற கால கட்டத்தில் இருந்த பொழுது எடுத்த திரைப்பட தான் 16 வயதினிலே. அப்பொழுது கமலஹாசன் மன்மதலீலை, மேல்நாட்டு மருமகள், சொல்ல வந்தான் நினைக்கிறேன் ஆகிய திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலம் அடைந்து இருந்தார் கமலஹாசன். ஆனால் அப்பொழுது சப்பையான கேரக்டரான சப்பானி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் 16 வயதினிலே திரைப்படத்தில். ஆனால் அவரின் நடிப்பு அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்தது அந்த அளவு தனது யதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த மக்களையும் கட்டிப் போட்டார்.

கமலஹாசனை சப்பானி கதாபாத்திரத்தில் பார்க்க முடியுமா என்று யோசிக்கும் படி பாரதிராஜா தன்னுடைய இயக்கத்தின் மூலம் வெளிக்காட்டினார். இது ஒரு புதுமை என்றால் இன்னொரு புதுமை நகரத்து பெண்ணாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீதேவியை மயிலு என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்க வைத்தது தான். பாரதிராஜா போல் திறமையான இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.
படத்தின் தொடக்கத்தில் எழுத்துப் போடும் போதே பாரதிராஜா எவ்வளவு புதுமையான மனிதர் என்று நாம் கவனித்து இருக்கலாம். படத்தில் ஸ்ரீதேவி, ரஜினி கமலஹாசன் ஆகியவைகளை காட்டும் பொழுது அவர்கள் பெயர் வராது அதற்கு பதிலாக அவரின் கதாபாத்திரங்களின் பெயர்தான் வெளியாகும் இது ஒரு சாதாரண விஷயமல்ல நடிகர்களின் சம்மதம் இல்லாமல் இதைச் செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அதேபோல் 16 வயதினிலே திரைப்படம் முடிந்தபிறகு அந்த திரைப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது ஆனால் விநியோகஸ்தர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை வாங்க முன்வரவில்லை என்னதான் புகழ்பெற்ற நடிகர்கள் இசைஞானி இளையராஜா என பிரம்மாண்டமாக திரைப்படம் அமைந்தாலும் கமலஹாசனை சப்பானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, இந்த திரைப்படம் வெற்றி பெறுமா என அவர்களிடம் தயக்கம் இருந்துள்ளது.

அதனால் கடைசிவரை இந்த திரைப்படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை அதனால் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு சொந்தமாக படத்தை வெளியிட்டார் படம் வெளியாகி 175 நாள் ஓடி மிகப்பெரிய சாதனையை பெற்றது எங்கு பார்த்தாலும் 16 வயதினிலே பற்றிய பேச்சுதான். அந்தளவு மாபெரும் வெற்றி பெற்றது ரஜினி மற்றும் ஸ்ரீதேவியின் கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் நடிகர் கமலஹாசன் நடிப்பை பார்த்து மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்தார்.
அந்தவகையில் 16 வயதினிலே திரைப்படத்தை பத்திரிக்கைகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர் கமலஹாசன் என்றால் இப்படித்தான் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் பாரதிராஜா அவரை எப்படியும் காண்பிக்கலாம் என்று நிரூபித்து அதில்வெற்றி பெற்று ஒரு புதுமையை வெளிக்காட்டினார் பாரதிராஜா.