ஒன்பதாம் வகுப்பு மாணவியை கையை பிடித்து ஐ லவ் யூ சொன்ன ஆசிரியர்.! பிறகு நடந்தது என்ன தெரியுமா.?

0

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியிடம் கடந்த சில நாட்களாகவே அந்த ஆசிரியர் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அய்யனார் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா நாற்பத்தி மூன்று வயது ஆகும் இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை யில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ள கணித ஆசிரியர் கடந்த சில நாட்களாகவே ஒன்பதாம் வகுப்பு  படிக்கும் 14 வயது மாணவிக்குஅடிக்கடி தேவையில்லாமல் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஒரு நேரத்தில் பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது மாணவிக்கு கணக்கு சொல்லித் தருவது போல் பென்ச்சில் அமர்ந்துள்ளார் கணித ஆசிரியர் அதன் பிறகு கையை பிடித்து இழுத்து ஐ லவ் யூ என கூறியுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதுமட்டுமில்லாமல் சகமாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்ய ஆரம்பித்தார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்ததும் தன்னுடைய பெற்றோரிடம் சென்று நடந்ததைக் கூறி அழுதுள்ளார் இதுக்குமேல் அந்த பள்ளிக்கு நான் செல்ல மாட்டேன் என்னை மீறி போக சொன்னால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் நள்ளிரவில் கணித ஆசிரியர் முத்தையா வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினார்கள்.

இதனால் படுகாயம் அடைந்த கணித ஆசிரியர் முத்தையாவை பொதுமக்கள் சிலர் சமரசம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் பின்பு பள்ளி மாணவியின் பெற்றோர்கள் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார் இதனால் வழக்குப்பதிவு செய்து கணித ஆசிரியர் முத்தையா வை அதிரடியாக கைது செய்தார்கள் போலீஸ்.