ரஜினியை கவர்ந்த 9-ம் வகுப்பு மாணவன்..வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார்.! இணையதளத்தில் பட்டைய கிளப்பும் புகைப்படம்.

தற்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்கள் உருவாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதனால் இவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் கொண்டாடுபவர்கள் வசூல் வேட்டையில் முதலிடத்தை பிடிக்க உதவுகின்றன.

அந்த வகையில் விஜய் அஜித் சூர்யா போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் ஒரு படி முன்னேறி 40 வருட காலமாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்த படுகிறது. அதற்கு அவரது ரசிகர்களே காரணம் அந்த அளவிற்கு உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக் கொண்டு தற்போது சினிமா உலகில் சைலண்டாக வலம் வருகிறார் ரஜினி.

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் ருபீஸ் எனப்படும் க்யூப்ஸ் விளையாட்டை வைத்து ஒரு சிறுவர் ரஜினியின் முகத்தை வரைந்து உள்ள புகைப்படம் தற்போது இணையதளத்தில் வலம் வருகிறது.

அதனை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த சிறுவனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கேரளாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுவன் ஒருவன் கியூப்ஸ் விளையாட்டை மிக ஆர்வமாக விளையாடி வந்தார் இந்த நிலையில் மிகப்பெரிய கியூப்ஸ்களை  வைத்து ரஜினியின் புகைப்படத்தை ஒன்றுசேர்த்து அசத்தி உள்ளார் அந்த புகைப்படங்கள் ரஜினி வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது இணைய தளத்திலும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment