96 படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான் வருந்தும் பிரபல நடிகை.

0
96
96

விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய திரைப்படம் 96 இந்த திரைப்படம் அனைத்து காதல் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டது, பள்ளிப் பருவக் காதலை மிகவும் அழகாக காட்டியிருந்தார் இந்த திரைப்படத்தில், பள்ளி பருவத்தில் பழைய காதலி மீண்டும் கண் முன்னால் வந்தால் என்ன ஆகும் என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய கதை.

தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது இந்த நிலையில் தற்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி திரிஷா தங்களது அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார்கள் அதேபோல் பள்ளி பருவத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் மிகவும் அற்புதமாக இருந்தது.

இவர்களின் எதார்த்தமான நடிப்பு தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறலாம், இந்த நிலையில் 96 திரைப்படத்தில் முதலில் திரிஷாவுக்கு பதில் நடிக்க இருந்தது மஞ்சு வாரியர் தான்.

ஏதோ சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால் படக்குழு த்ரிஷாவை நடிக்க வைத்தார்கள், இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர் நடித்து இருந்தால் அசுரனை விட மிகப்பெரிய பெயர் அவருக்கு கிடைத்திருக்கும், இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே கூறினார்.