96 இயக்குனருடன் இணைந்த கார்த்தி.! அப்போ விஜய் சேதுபதி நிலைமை.?

0
96
96

விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார் இயக்குனர் பிரேம்குமார். பள்ளி பருவத்தில் நடக்கக்கூடிய காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதை உருக வைத்தது என்றே சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெருசாக பேசப்பட்டது அது மட்டுமல்லாமல் நடிகை திரிஷாவிற்கு இந்த திரைப்படம் ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து மறுபடியும் இயக்குனர் பிரேம்குமார் உடன் விஜய் சேதுபதி அவர்கள் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

அப்படி இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் 96 படத்தின் இரண்டாவது பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் அவருக்கு பதிலாக பிரபலம் முன்னணி நடிகரை களம் இறக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதாவது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக 96 பட இயக்குனருடன் இணைய முடியாமல் போனதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போ விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கவில்லை என்றால் வேறு யாரு அவருடன் இணைய போகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது அந்த வகையில் தற்போது பிரேம்குமார் உடன் இணைந்து கார்த்தி அவர்கள் நடிக்க இருப்பதாக பல தகவல்கல் வெளியாகி இருக்கிறது.

அது மட்டுமல்ல இந்த திரைப்படமும் ஒரு காதல் திரைப்படமாக தான் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது பிசியாக இருந்து வரும் கார்த்தி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கைது 2 படத்தில் நடிக்க இருக்கிறாராம் அது மட்டுமல்லாமல் கைதி 2 முடிஞ்சதும் சர்தார் 2வில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இப்படி பிஸியாக இருந்து வரும் கார்த்தி இடையில் பிரேம்குமார் உடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்..

மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் கார்த்தி தரப்பில் இருந்தும் பிரேம்குமார் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.