சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க போட்டி போடும் இந்த முன்னணி நடிகைகள்.!! கண்ணுலையே கவர்ச்சி காட்டும் நடிகையைத் தேடும் இயக்குனர்!!

0

90’s leading actress silk sumitha biography movie will be taken by director manikandan: தமிழ் சினிமாவையே தன்வசப்படுத்தி வைத்திருந்தவர் நடிகை சில்க் சுமிதா. இவருக்கு அடிமையாகாத ரசிகர்களே கிடையாது. இன்றும் இவரது திரைப்படத்தை பார்த்தால் ரசிகர்கள் வாயை பிளக்கின்றனர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த ரஜினி கமல் போன்ற அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி நடிகையாக வலம் வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது தான் அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் கதையில் வித்யா பாலன் ஹிந்தியில் நடித்து டர்டி பிக்சர் என்ற பெயரில் வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து தற்போது தமிழில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைபடத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் அவர்கள் இயக்கவுள்ளார்.

எனவே இந்த திரைப்படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் நடிக்க கண்களாலே கவரும் நடிகையை தேடிக் கொண்டிருக்கிறாராம். இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா போன்ற  இன்னும் சில முன்னணி நடிகைகள் போட்டி போட்டுக் கொள்கின்றனர்.

அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இப்போதுள்ள நடிகைகளில் எந்த நடிகைக்கும் அவளவு தைரியம் இருக்குமா என்பது சற்று யோசிக்க வேண்டியது தான் என கூறியுள்ளனர்.