90’s ஹிட்ஸ் ஃபேவரிட் நடிகை விசித்ரா தற்போது ராசாத்தி சீரியலில் நடித்து வருகிறார் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாவ் கூறிவருகிறார்கள்.
1992 ஆம் ஆண்டு சின்ன தாயே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை விசித்ரா தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார், கவர்ச்சி நடிகையாகும் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர், இவர் ரஜினி நடித்த முத்து திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் என பல மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார், திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார், இவருக்கு தற்பொழுது மூன்று மகன்கள் இருக்கிறார்கள், தனது குடும்பத்துடன் மைசூரில் செட்டிலானவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ராசாத்தி என்ற சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
In chennai for #rasathi shoot..#suntv pic.twitter.com/e4lRshvfaj
— Vichitra (@vichitra_90) October 14, 2019
இதனாலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் சித்ரா தனது போட்டோ என்று பதிவிட்டுள்ளார் அதில் மஞ்சள் நிற புடவையில் இருக்கிறார் அது மட்டுமில்லாமல் பெரிய பொட்டு கை நிறைய வளையல் அணிந்து உள்ளார், இந்த புகைப்படம் ரசிகர்கள்தான் வைரலாகி வருகிறது.
Semma homely look.. Gorgeous ah irukeengaa.. ?
— Joshua113086 (@joshua113086) October 14, 2019