90க்களில் புகழ்பெற்ற கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் இர்பான் தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

0
irfan
irfan

கனா காணும் சீரியல்கள் 90களில் மிகவும் பிரபலமானது, இந்த சீரியல் தன் ரசிகர்களின் ஃபேவரட், பள்ளி பருவ வாழ்க்கை நம் கண் முன்னே கொண்டு வருவது போல் இந்த சீரியல் அமைந்திருந்தது அதனால்தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த சீரியலில் இரண்டு கேங்க்ஸ்டர் இருந்தது, ஒன்று பாலா கேங் மற்றொன்று இர்பான் கேங், இந்த இரண்டு கேங்கும் அடிக்கும் லூட்டி தான் கதையாக இருக்கும், இந்த சீரியலில் இர்பானாக நடித்தவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்திருந்தார்.

இவரின் ஆசை இயக்குனராக வேண்டும் என்பதுதான், அதற்காக மிகவும் போராடி வருகிறார், இவர் யாரிடமும் பணத்தை எதிர்பார்க்காமல் ஒரு ஹோட்டலில் வெயிட்டராக  வேலை செய்துகொண்டு அதில் வரும் பணத்தை வைத்துக் கொண்டு தனது செலவை பார்த்து கொள்கிறார்.

இப்படி கஷ்டப்பட்டு கொண்டு தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் இவரை நாம் சினிமாவில் இயக்குனராக பார்ப்போம் என எதிர்பார்க்கப்படுகிறது.