கமல் என்சைக்ளோ பீடியானு சும்மாவா சொல்றாங்க.. ஆல்ரவுண்டராக இருக்கும் 9 விஷயங்கள்

Kamal Hassan: தமிழ் சினிமாவில் ஆல்ரவுண்டராக இருந்து வருபவர் தான் நடிகர் கமலஹாசன். இவரை என்சைக்ளோ பீடியா என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார் .அந்த வகையில் உலக அளவில் தனக்கென பெருத்த ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவ்வாறு நடிகர் கமலஹாசன் என்சைக்ளோ பீடியா என்று அழைப்பதற்கான ஒன்பது காரணங்களை பார்க்கலாம்.

1. உலகநாயகன் கமலஹாசன் முதலாவதாக 232 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

2. இவ்வாறு நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனராக 5 திரைப்படங்களில் வேலை செய்துள்ளார்.

3. கமலஹாசன் அவர்கள் ராஜ்கமல் ஸ்டுடியோ சென்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கிட்டத்தட்ட 26 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

4. சிறந்த பாடகர் என்பதை நிருபிக்கும் வகையில் 107 பாடல்களை பாடியுள்ளார்.

5. இதனை அடுத்து 36 படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

6. 22 பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

7. 7 படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்துள்ளார்.

8. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுக்கும் தொகுப்பாளராக கிட்டத்தட்ட 6 சீசனங்களில் பணியாற்றியுள்ள நிலையில் 7வது சீசனையும் விரைவில் தொகுத்து வழங்க இருக்கிறார்.

9. கடைசியாக சினிமாவில் மட்டுமல்லாமல் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலிலும் களம் இறங்கி இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு கட்சியையும் ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறு இந்த ஒன்பது விஷயங்களால் நடிகர் கமல் ஆல்ரவுண்டராக இருந்து வரும் நிலையில் அப்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக இயக்குனர் சங்கர் இயக்கி வரும் நிலையில் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment