9 – நாள் முடிவில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் எது தெரியுமா.? துணிவா.. வாரிசா..

விசேஷ நாட்களில் டாப் ஹீரோக்களின் படங்கள் களம் இறங்குவது வழக்கம் அந்த வகையில் இந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் களம் இறங்கின. ஏற்கனவே பல தடவை அஜித் – விஜய் பல தடவை மோதி இருந்தாலும்..

இந்த பொங்கல் யாருக்கான பொங்கலாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள போட்டி போட்டன.. அஜித்தின் துணிவு திரைப்படம் ஆக்சன், சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் என அனைத்தும் இருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் தற்பொழுது திரையரங்க பக்கம் இழுத்து உள்ளது.

அதன் காரணமாக துணிவு திரைப்படத்தின் வசூல் முதல் நாளிலிருந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை ஆரம்பத்தில் பெற்றது இருப்பினும் போகப் போக குடும்ப ஆடியன்ஸ் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்

இதனால் வாரிசு படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் 9  நாட்கள் முடிவில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் எது என்பது குறித்து தகவல்கள் வெளிவந்திருக்கிறது அதன்படி பார்க்கையில் அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 9 நாட்கள் முடிவில் 98 கோடிவசூல் செய்து உள்ளதாம்.

விஜயின் வாரிசு திரைப்படம் 9 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 97 வசூல் செய்துள்ளது தொடர்ந்து தமிழகத்தில் அஜித்தின் துணிவு வசூல் தான் அதிகரித்துள்ளது ஆனால் உலக அளவில் மொத்தமாக விஜயின் வாரிசு திரைப்படம் தான் அதிகம் வசூல் எதிர்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் இரண்டு படக்குழுவும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடவில்லை..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment