87 வயது பாட்டி ரசிகையிடம் ஆசிர்வாதம் வாங்கிய விராத் கோலி மற்றும் ரோஹித் வைரலாகும் வீடியோ.! ட்விட்டரில் கருது கூறிய கோலி

0

நேற்று நடைபெற்ற இந்தியா பங்களாதேஷ் போட்டியை காண 87 வயது பாட்டி ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார். இவரைப் பற்றிய விவரங்களை தற்பொழுது பார்க்கலாம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின, இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 314 ரன்கள் அடுத்தது இதில் ரோகித் சர்மா சதத்தை விளாசினார், ராகுல் அரைசதத்தை கடந்தார், சிறப்பான துவக்கம் கிடைத்த இந்திய அணிக்கு போகப்போக மோசமான முடிவே அமைந்தது துவக்க வீரர்களைத் தவிர எந்த வீரர்களும் சிறப்பாக ஆடவில்லை.

315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது அதனால் 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியின் போது கேமரா மூலம் திரையில் காட்டப்பட்ட 87 வயது சாருலதா பாட்டி.. அப்பொழுது இவர் வாயில் விசில் வைத்துக் கொண்டு இந்திய அணியை உற்சாகப்படுத்தினார், இதைப்பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் இவரை சமூகவலைதளத்தில் புகழ்ந்து தள்ளி போட்டி முடிவதற்குள் பிரபலமாக்கி விட்டார்கள்.

அதன்பிறகு போட்டி முடிந்த பின்பு இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இவரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினார், அதன் பிறகு கேப்டன் விராத் கோலி அந்த பாட்டியை சந்தித்தார் கட்டித் தழுவினார் ஆசிர்வாதம் வாங்கினார் மேலும் அந்த பாட்டி அனைவரும் என் பிள்ளைகள் எனக் கூறி நெகிழ்ந்தார்.

மேலும் இது குறித்து ட்விட்டரில் விராத் கோலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர் கூறியதாவது “ போட்டியை காண வந்து எங்களை உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. உங்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் வேண்டும் சாருலதா படேல் பாட்டி. 87 வயதிலும் போட்டியை காண வந்த இவரைப் பார்க்கும் போது வயது என்பது வெறும் எண் தான் இவருக்கு ஏன தெரிகிறது” என பதிவிட்டிருந்தார்.