Titanic movie actress about 85 year old man:1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் மாக்ரோ இயக்கத்தில் வெளிவந்த ஆங்கில திரைப்படம் டைட்டானிக். இந்த திரைப்படத்தில் லியோனர்டோ டி காப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் டைட்டானிக் என்ற கப்பல் தனது முதல் பயணத்தின் போது ஆயிரக்கணக்கில் பயணிகளை ஏற்றிச் சென்று அங்குள்ள பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த உண்மை கதையை பின்னணியாகக் கொண்டு இயற்றப்பட்ட படம் டைட்டானிக்.
இந்த படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் படம் உலகெங்கும் பல கோடி ரசிகர்களை கவர்ந்தது, என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த படம் வெளிவந்து சில வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு இமய மலையை பார்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட இப்படத்தின் நடிகைக்கு ஒரு ஆச்சரியம் ஏற்பட்டது.
இவர் இமயமலையில் சுற்று பயணம் மேற்கொண்டபோது 85 முதியவர் ஒருவர் கைத்தடியை ஊன்றிக் கொண்டு தன்னிடம் வந்து நீங்கள் டைட்டானிக் படத்தின் ஹீரோயினா என்று கேட்டாராம். அதற்கு அவர் ஆமாம் என்று கூறினாராம். அதற்கு அந்த முதியவர் அவரது கையை எடுத்து இதயத்தில் வைத்து நன்றி என்று கூறினாராம்.
உடனே நெகிழ்ச்சியில் டைட்டானிக் ஹீரோயின் அந்த இடத்திலேயே அழுது விட்டாராம். இதன் மூலம் அவருக்கு இந்த படம் தனக்கு எவ்வளவு ரசிகர்களை கொடுத்துள்ளது என்று புரிந்து கொண்டாராம்.