பிப்ரவரி 22 நாளை வெளியாக இருக்கும் 8 தமிழ் திரைப்படங்கள்.!

8 Tamil films release on february 23: சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை தொடர்ந்து பல திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி நடைப்போட்டு வருகிறது. அப்படி எதிர்ப்பாராத சில படங்கள் மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் பல கோடி வசூல் செய்த சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

இந்த சூழலில் 2024ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான 23ஆம் தேதி அன்று மட்டும் எட்டு தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் கடந்த வாரம் பிப்ரவரி 16ஆம் தேதி 8 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 படங்கள் மட்டுமே வெளியானது.

அடுத்த பிதாமகன் விக்ரம் போல் அருண் விஜய் வெளியானது வணங்கான் teaser..!

இதனை அடுத்து இந்த வாரம் எட்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ல் விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி, தனுஷ், சூர்யா, அருண் விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில் கண்டிப்பாக இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் இந்த வாரம் வெளியாக இருக்கும் எட்டு திரைப்படங்களுமே சிறிய பட்ஜெட் படங்கள் ஆகும். அதன்படி பைரி, பர்த்மார்க், கிளாஸ்மேட்ஸ், நினைவெல்லாம் நீயடா, ஆப்ரேஷன் லைலா, பாம்பாட்டம், ரணம், வித்தைகாரன் ஆகிய 8  படங்களும் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலில் இருந்ததை நினைத்து பைத்தியம் போல் நடந்து கொள்ளும் சரஸ்வதி.! என்ன செய்யப் போகிறார் தமிழ்.. வார்டன் நிலைமை என்ன..

இதனை அடுத்து அடுத்த மாதம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்திற்கும் ஆண்டு தேர்வுகள் நடைபெற இருப்பதால் கண்டிப்பாக திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இல்லை அதுவும் முக்கியமாக டாப் நடிகர்களின் திரைப்படங்களை எதிர்பார்க்க வேண்டாம்.

Exit mobile version