திரையரங்கில் திகிலில் மிரட்டிய 8 பேய் திரைப்படங்கள்.! அதிலும் அந்த திரைப்படம் வேற லெவல்..!

0
myyskin
myyskin

தமிழ் சினிமாவில் திரில்லர் மூவி நாளுக்கு நாள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் திரையரங்குகளில் பதற வைத்த 8 திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.

யாவரும் நலம்: இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் சரண்யா போன்ற பலரும்  இந்த திரைப்படத்தில் சிறப்பான முறையில்  நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் மாதவனின் குடும்பம் ஒரு அப்பார்ட்மெண்டில் புதிதாக போனபோது அந்த  அப்பார்ட்மெண்டில் அமானுஷ்ய விஷயங்களை பார்கிறார்கள். இந்த இடத்தில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில் தான் அந்த அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டது  அதை கண்டுபிடிக்கும் மாதவன் கதையாகும்.

டிமான்டி காலனி : மேலும் இந்த திரைப்படம் அருள்நிதி மற்றும் ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் இவர்களது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த திரைப்படத்தில் நான்கு பேர்  ஒரு பங்களாவுக்கு  போயிட்டு வெளியில் வரமுடியாமல் தவிப்பார்கள் அவர்களை சுற்றி சுற்றி வந்தது அமானுஷ்ய விஷயங்களை கண்டுபிடிக்கும் இத்  திரைப்படமாகும்.

பீட்சா: மைக்கேல் என்பவர் இந்த திரைப்படத்தின் டோர் டெலிவரி செய்யும் பையன் அவரது முதலாளியிடம் பேய் கதையை சொல்லி வைரங்களை திருட முயற்சிக்கிறான். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ரம்யா போன்ற பலரும்  நடித்து இருப்பார்கள். மேலும் இந்த திரைப்படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

லிப்ட்: இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் மற்றும் அமிர்தா இவர்கள் இருவரும்  அமானுஷ்ய தாள் ஒரு லிப்டில் மாட்டிக்கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்து போய் நிற்பார்கள். மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லிப்டில் மட்டும்தான் இருக்கும். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

அவள்: சித்தார்த் ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு புது வீட்டிற்கு செல்வார்கள் ஆனால் அந்த பக்கத்து வீட்டில் உள்ள பேய்கள் அவரை ரொம்ப தொந்தரவு செய்து தூங்க விடாமல் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே தான் இருந்தது. அதனால் இவர்களின் நிம்மதி போய் ரொம்ப பயத்துடன் இறந்த திரைப்படமாகும்.

பிசாசு: இந்த திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கியுள்ளார்.  மேலும் இந்த படத்தில் நாயகர் நாகா பிரியாகா மார்ட்டின், ராதாரவி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இந்தி திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். ஒரு பெண்ணின் ஆவி  இளைஞரை ரொம்ப ரொம்ப கொடூரமாக பயன்படுத்துகிறது. ஆனால் அதன்பிறகுதான் தெரிகிறது அவரைக் காதலித்த பெண் என்று அதன் பிறகு அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று இந்த திரைப்படத்தின் கதை

மாயா: நயன்தாரா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா அப்சராவாகவும் மாயா பேயாகவும் இந்த திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க பெரும் பரபரப்பாக தான் இருந்துவரும்.

ஈரம் : 2009ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் ஈரம் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஆதி, நந்தா, சிந்து மேனன் இவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடித்து இருப்பார்கள். இந்த படத்தில் அவரது மனைவியை அவரது கணவனை கொன்று இருப்பான்.  அதன் பின்பு அவரது மனைவி ஆவியாய் வந்து என்னை கொள்வதற்கு யார் தூண்டுதல் செய்தார்களோ அவர்களை தண்ணீர் மூலம் கொலை செய்து வருவார்.