இந்த மாதம் வெளியாகும் 8 படங்கள்..! ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல..

தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன மாதத்தில் பத்திருக்கும் மேற்பட்ட படங்கள் வெளி வருகின்றன அதன்படி ஜூன் மாதம் மட்டும் 8 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

வருகின்ற ஒன்பதாம் தேதி சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள போர் தொழில் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை எதிர்த்து சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களையும் எதிர்த்து விமானம் என்னும் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளி ஆகிறது.

ஜூன் 16ஆம் தேதி  எஸ் ஜே சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படம் வெளியாகிறது பல கோடி பட்ஜெட்டில் உருவான ஆதிபிருஷ் திரைப்படமும் இதே தேதியில் தான் ரிலீஸ் ஆகிறது. தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவருடன் இணைந்து பலரும் நடித்துள்ளனர்..

இந்த இரண்டு படங்களையும் எதிர்த்து சார்லின் நடித்த எறும்பு திரைப்படம் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜூன் 23ஆம் தேதி தண்டட்டி என்ற படம் வெளியாகிறது 29ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது இந்த படம் உதயநிதி ஸ்டாலினுக்கு கடைசி படம் எனவும் கூறப்படுகிறது.

படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்து பகத் பாஸில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பல முன்னணி ஜாம்பவான்கள் நடித்துள்ளனர் இந்த படம் பெரியளவில் எதிர்பார்க்கப்படுகிறது வடிவேலுக்கு இந்த படம் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாகவும் காணப்படுகிறது ஏனென்றால் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்..

Leave a Comment