8 – நாள் முடிவில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் எது தெரியுமா.?

0
thunivu and varisu
thunivu and varisu

டாப் ஹீரோக்களின் படங்கள் சோலோவாக வெளிவந்தால் 200 கோடி அல்ல 300 கோடி கூட வசூல் செய்யும் ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு டாப் ஹீரோவின் படங்கள் மோதுவதால் வசூல் குறையும் என்பது நாம் சொல்ல தேவையில்லை அது காலம் காலமாக பார்த்து வருகிறோம் அந்த வகையில் இந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி..

அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு திரை படங்கள் களம் இறங்கின இதனை அஜித், விஜய் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது ஆனால் துணிவு திரைப்படம் அப்படியே அதுக்கு எதிர் மாறாக தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனத்தை..

பெற்று திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே அஜித்தின் துணிவு திரைப்படம் வசூல் அதிகம் செய்து வந்தது. இதுவரை ஏழு நாள் முடிவில் நடிகர் அஜித்தின் துணிவு கை ஓங்கி இருந்த நிலையில் எட்டாவது நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது.

என்பது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி பார்க்கையில் இதுவரை முன்னிலையில் இருந்த துணிவு திரைப்படத்தை ஒரு வழியாக விஜய்யின் வாரிசு திரைப்படம் சமன் செய்துள்ளது. ஆம் 8 நாள் முடிவில் இரண்டு திரைப்படங்களும் 95 கோடி தமிழகத்தில் வசூல் செய்து சமநிலையில் இருக்கிறது.

இதனால் இரண்டு தரப்பு ரசிகர்களும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் இருந்தாலும் அடுத்த நாளில் அஜித்தின் துணிவா.. விஜயின் வாரிசா.. யார் கை ஓங்கும் என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.