செல்வராகவன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி இந்த திரைப்படத்தின் மூலம் ரவிகிருஷ்ணா அறிமுகமானார் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார், மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். சோனியா அகர்வால் செல்வராகவனின் முதல் மனைவி ஆனால் இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கை கசப்பானதால் விவாகரத்து செய்து கொண்டார்கள் இப்போது இவர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதேபோல் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும், அது மட்டுமில்லாமல் புதுமுக ஹீரோவை வைத்து இப்படி ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்க முடியும் என்றால் இந்த பெருமை செல்வராகவனுக்கு சென்றடையும்.
7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் ரவி கிருஷ்ணாவும் சோனியா அகர்வாலும், கதிர் அனிதாவாக நடித்திருந்தார்கள் அப்படியிருக்க இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக சந்தித்துக் கொள்ளவில்லை ஆனால் பல வருடம் கழித்து தற்போது சந்தித்துள்ளார்கள் அதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் இதோ அந்த புகைப்படம்.