5 மாதத்தில் 7000 மாணவிகள் கர்ப்பம்.! பள்ளிக்கூடங்கள் மூடியதால் நடந்த விபரீதம்.!

7000 students pregnant in 5 months due to closure of schools : கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் மிகப் பெரிய அச்சத்தில் இருந்து வருகிறது இதன் காரணமாக பள்ளி,  கல்லூரி, தொழில் வளாகம் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.

இருப்பினும் பள்ளி கல்லூரி மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என அரசாங்கம் அதனை கருத்தில் கொண்டு ஆன்லைன் கிளாஸ் போன்றவற்றை நடத்தி வருகிறது.இருப்பினும்வீட்டில் இருக்கும்  பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவில் 5 மாதங்கள் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் மாணவிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கர்ப்பமாகி உள்ள செய்தியை அனைவரையும் அதிர வைத்துள்ளது அதுவும் குறிப்பாக 10 வயதிலிருந்து 14 வயதுக்குள் இருக்கும் மாணவ மாணவிகள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல பிற நாடுகளான கென்யா மற்றும் ஒரு சில நாடுகளில் கர்ப்ப ஆனாவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா ஒரு பக்கம் உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் மறுபக்கம் ஒரு சிலரின் செயலால் மாணவிகளின் நிலைமை பெரிதும் கேள்விக்கறியாக இருந்து வருகிறது.

இதை தடுக்க அந்நாட்டு அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment