தேசிய விருதை வாங்கிய 7 தமிழ் நடிகர்கள்..! யார் யார் தெரியுமா.? இந்த ஒரு ஹீரோ மட்டும் அதிக முறை..

சினிமா உலகில் நடிக்கும் நடிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆசை என்னவென்றால் தான் சிறந்த நடிகர் என்ற பட்டத்தைப் பெற விரும்புகிறார்கள் அந்த வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர், நடிகைகளுக்கு   தேசிய விருதை கொடுத்து கௌரவிக்கிறது. ஆனால் அது எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்கு அது கிடைக்கும்.

அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் பல சிறந்த நடிகர்கள் இருக்கின்றனர் இருப்பினும் விரல்விட்டு என்னும் அளவிற்கு மட்டுமே நடிகர்கள் தேசிய விருதை பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற ஏழு பேர் யார் என்பது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.

  1. எம்ஜிஆர் :  70, 80  காலகட்டத்தில்  கொடி கட்டி பறந்தவர் எம்ஜிஆர் இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்திருந்தாலும் ரிக்ஷாகாரன் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. 2. உலக நாயகன் கமலஹாசன் :  80 காலகட்டத்தில் இருந்து இப்போது வரையிலும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் இதுவரை மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.  விக்ரம் : நடிப்பிற்கு பெயர் போனவர் விக்ரம். இவர் பிதாமகன் படத்திற்கு தேசிய விருதை பெற்றவர். 4. பிரகாஷ்ராஜ் :சினிமா உலகில் ஹீரோ, வில்லனாக நடித்து வரும் பிரகாஷ்ராஜ் காஞ்சிவரம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். 5.  விஜய் சேதுபதி : தமிழ் சினிமா உலகில் ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களும் நடித்து வெற்றி கண்டு ஒருவர் விஜய் சேதுபதி இவர் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

6. தனுஷ் : தமிழ் சினிமா உலகில் நல்ல நல்ல படங்களை கொடுத்து வெற்றி கண்டு வருபவர் தனுஷ். இவர் அசுரன் மற்றும் ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்றவர். 7.  சூர்யா : திரை உலகில் வித்தியாசமான படங்களை கொடுத்து ஓடுபவர் இவர் சூரரை போற்று படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார் அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழ் சினிமா உலகில் அதிகபட்சமாக கமல் மூன்று முறை தேசிய விருது வாங்கியிருக்கிறார் தனுஷ் இரண்டு முறை பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment