ஒரே வருடத்தில் 7 திரைப்படங்களில் நடித்த சினேகா.! எந்தெந்த திரைப்படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் மற்றும் பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை தான் சினேகா. இவர் ஒரு வருடத்தில் 7 திரைப்படங்கள்  நடித்துள்ளார் அதை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

முதல் திரைப்படம் 2002 இல் கமல் மற்றும் சினேகா, சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பம்மல் கே சம்பந்தம். இந்தபடத்தில் இவர்களுடன் பல குனச்சித்திரங்கள் நடித்துள்ளனர்.

pammal K.sambandam

2002ஆம் ஆண்டு வெளியான புன்னகை தேசம் இந்தப் படத்தில் தருண்,குணால், மற்றும் சினேகா இவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் புன்னகை தேசம்.

bunnagai desam

2002ஆம் ஆண்டு வெளியான உன்னை நினைத்து, இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் அவர்கள் இயக்கியுள்ளார். ஒரு திரைப்படத்தில் சூர்யா, சினேகா, லைலா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

2002ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஏய் நீ ரொம்ப அழகா இருக்க. இத்திரைப்படத்தில் ஷாம் மற்றும் சினேகா  அவர்கள் நடித்துள்ளனர்.

yai nee romba azhaga irukke

2002ஆம் ஆண்டு இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கிங், இத்திரைப்படத்தில் சினேகாவுக்கு ஜோடியாக விக்ரம் அவர்கள் நடித்து உள்ளார்.

2002 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், சினேகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஏப்ரல் மாதத்தில். இந்த திரைப்படத்தில் இவர்களுடன் காயத்ரி ஜெயராமன், வெங்கட் பிரபு, மற்றும் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

apral mathaththil

2002ஆம் ஆண்டு இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விரும்புகிறேன். இந்த திரைப்படத்தில் சினேகாவுக்கு ஜோடியாக பிரசாந்த் அவர்கள் நடித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version