7/G ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர் மற்றும் நடிகை தான்.! யார் தெரியுமா?

0
rainbowconlunye
rainbowconlunye

செல்வராகவன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியாக திரைப்படம் செவன் ஜி ரெயின்போ காலனி, இதை திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் நடித்திருந்தார்கள், 2004 ஆம் ஆண்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அதுமட்டுமில்லாமல் படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தன.

செவன் ஜி ரெயின்போ காலனி திரைபடத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு திரைக்கதை அமைத்திருந்தார் செல்வராகவன், இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் 15 வருடத்திற்கு முன்பு ஒரு தனியார் நாளிதழுக்கு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார்கள்.

அந்த பேட்டியில் தங்களது திரைப்பயணத்தின் அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்கள், அப்பொழுது ரவிகிருஷ்ணா பேசும் பொழுது, முதலில் இந்த ஸ்கிரிப்டை என் தந்தை என்னிடம் கொடுத்தார் நான் படித்து பார்த்தேன் பிடித்திருந்தது பின்பு இந்த திரைப்படத்தில் யார் ஹீரோ என கேட்டேன் அப்பொழுது அவர் சூர்யா ஹீரோவாகவும் சுவாதி நடிகையாகவும் நடிக்க இருக்கிறார் என கூறினார்.

அதன்பின்பு சூர்யா மற்றும் சுவாதி கால்ஷீட் கிடைக்காததால் வேறு யாரை நடிக்க வைக்கலாம் என நினைக்கையில் என்னையும் சோனியா அகர்வாலை நடிக்க வைக்க செல்வராகவனிடம் எனது அப்பா கேட்டார், முதலில் செல்வராகவன் மறுத்தார் அதன் பின்புதான் ஓகே சொன்னார், இப்படி தான் எனது திரைப்பயணத்தில் தொடங்கினேன் என சந்தோஷமாக அந்த பேட்டியில் கூறினார்.