மெர்சல் டு லியோ ஒரு வாரத்திற்குள் 100 கோடியை அள்ளிய விஜய்யின் 7 படங்கள்..

Vijay Leo Movie: தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் ஏராளமான படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி கலவை விமர்சனத்தை பெற்றாலும் சில படங்கள் வசூல் ரீதியாகவும் மெகா ஹிட் அடித்து வருகிறது அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்திற்குள் 100 கோடி வசூல் செய்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி அன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் தான் லியோ. இந்த படம் ரிலீஸ் ஆகிய நான்கு நாட்களை கலந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்த மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய ஆறு படங்களும் வரிசையாக ரிலீஸ் ஆகி சில நாட்களிலேயே ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இவ்வாறு இந்த ஆறு படங்களை தொடர்ந்து ஏழாவது படமாக ஒரு வாரத்திற்குள் ரூபாய் 100 கோடி வசூல் செய்துள்ளது லியோ.

இவ்வாறு தற்பொழுது வரையிலும் ரூபாய் 300 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கும் நிலையில் விரைவில் 500 கோடி நெருங்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இவ்வாறு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் கலவை விமர்சனத்தை பெற்றாலும் உலகம் முழுவதும் இப்படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

எனவே கலவை விமர்சனத்தினால் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.