7 மாவட்டங்களில் கொளுத்தபோகும் மழை சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தற்பொழுது சென்னை வானிலை ஆய்வு மையம் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி உட்பட 7 மாவட்டங்களிலும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவிற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும், ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மீனவர்களுக்காக தென்கிழக்கில் உள்ள அரபிக்கடல், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் நாளை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அதேபோலவே தென்மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு 26 மணி நேரம்வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment