இணையதளத்தில் கசிந்த இளைய தளபதியின் 65 படப்பிடிப்பு புகைப்படம்.!

தளபதி தற்போது தனது 65 ஆவது திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் உடன் கை கோர்த்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் மேலும் சமிபத்தில் இளைய தளபதி விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது ரசிகர்களிடையே பெரிய சர்ச்சையை கிளப்பியது எதற்காக விஜய் சைக்கிளில் வந்தார் என அப்பொழுது பல ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தார்கள்.

இளைய தளபதி விஜய் வாக்களித்த கையோடு அன்று இரவே ஜார்ஜியா நாட்டிற்கு தனது 65ஆவது திரைப்படத்தில் கலந்து கொள்வதற்காக கிளம்பிவிட்டார் மேலும் அங்கு சென்ற பொழுது தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் அதே போல் தற்போதும் இளையதளபதி விஜயின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது விஜய் உட்கார்ந்திருக்கும் போது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/JDtheVaathi/status/1381606323402407937?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1381606323402407937%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fvijay-65-shooting-spot-leaked-pic-1618244218

இதனை அடுத்து இவரது இந்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment