600 கோடியில் பிரமாண்டத்திலும் பிரமாண்டம்.! சன் நெட்வொர்க் அதிரடி.! சினிமா ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து

இந்தியாவில் படங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவது சன் நெட்வொர்க், இந்த நிறுவனம் 600 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சன் நெட்வொர்க் நிறுவனம் 400 கோடி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும்,  200 கோடி சன் நெக்ஸ்ட் நிறுவனத்திற்கும் ஒதுக்கியுள்ளது இந்த தகவல் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’ தனுஷின் புதிய திரைப்படம், சூர்யாவுடன் புதிய திரைப்படம் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.  அதனால் சன் நிறுவனம் 400 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் இந்த பணத்தின் மூலம் பிரபல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க இருக்கிறார்கள்.

அதேபோல் சன் நெக்ஸ்ட் OTT தளத்திற்காக எக்ஸ்க்ளூசிவ் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

அதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக சன் நெட்வொர்க் நிறுவனம் 600 கோடி ரூபாயை ஒதுக்கி சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து திரை விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.

sun picture

Leave a Comment

Exit mobile version