60 நாட்களில் 300 கோடி திரைப்படத்திற்கு வந்த நிலைமை.. இத்தனை கோடி நஷ்டமா.?

0

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி இவர் தொடர்ச்சியாக நல்ல வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார், அதன் பிறகு திடீரென அரசியலில் ஆர்வம் அதிகரித்ததால் சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்தினார், ஆனால் அவர் நினைத்தபடி அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.

அதனால் மீண்டும் சினிமா பக்கம் தலை காட்டினார் இவர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் அதனை தொடர்ந்து அடுத்ததாக அவரின் மகன் ராம்சரண் சிரஞ்சீவியை வைத்து 300 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரித்தார்.

சைரா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெறும் 230 கோடி மட்டுமே வசூல் செய்தது, ஆனால் இந்த திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, அதனால் 70 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தார் தயாரிப்பாளர் ராம்சரண்.

இந்த நஷ்டத்தை ஈடுகட்ட உடனே இணைய தளம் மற்றும் டெலிவிஷன்களில் ஒளிபரப்ப அனுமதி கொடுத்தார் ராம்சரண், ஒரு படம் வெளியான பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து தான் இணைய தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது ஆனால் தனது நஷ்டத்தை சரிக்கட்ட படத்தை உடனடியாக ஒளிபரப்ப அனுமதி வழங்கியது கண்டிக்கத்தக்கது எனவும் இது வருங்காலத்தில் திரையரங்குகள் அழிவதற்கான நிலைமை என ஒரு கூட்டம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது.