இந்திய சினிமாவை திரும்பி போட இருக்கும் 6 திரைப்படங்கள்.? இப்பவே எதிர்பார்ப்பை ஏற்றிய லியோ படம்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்தது 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன அதில் ஒரு சில படங்கள் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் அப்படி இந்த வருடத்தில் இந்திய சினிமாவையே புரட்டி போட இருக்கும் 6 திரைப்படங்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்..

1. லியோ : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம் லியோ. இந்த படம் முழுக்க முழுக்க பக்கா ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது மேலும் விஜய் உடன் இணைந்து பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது லியோ படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இந்திய சினிமாவையே வியக்க வைக்கும் என கூறப்படுகிறது.

2. ஏகே 62  : துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஏகே 62 இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டாலும் இந்த படத்திற்கான அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை ஆனால் வெகு விரைவிலேயே டைட்டில் வீடியோவை வெளியிட்டு  உடனே ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

3. கேப்டன் மில்லர் : தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ் அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த வாத்தி திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட படமாக இருந்து வந்த நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய வரலாற்று பின்னணி கொண்ட ஒரு படமாக உருவாகி வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகரித்து காணப்படுகிறது.

4. கங்குவா : வணங்கான் படம் ட்ராப் ஆனதை தொடர்ந்து நடிகர் சூர்யா சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து நடித்து வரும் திரைப்படம் கங்குவா. இந்த படம்  சங்க காலத்து படமாக உருவாவது வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது மேலும் இந்த படம்  பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

5. ஜெயிலர் : ரஜினியை எப்பொழுதுமே ஆக்சன் கலந்த படங்கள் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து நடந்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருப்பதால் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.  ரஜினியுடன் இணைந்து மலையாள நடிகர் மோகன்லால், சிவராஜ்குமார்  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

6. இந்தியன் 2  : நடிப்பிற்கு  பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்ட நிலையில் மற்றொரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுக்க ஷங்கருடன் கூட்டணி அமைத்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க சுதந்திர போராட்ட சமயத்தில் நடந்த ஒரு கதையாக உருவாகி வருகிறது இந்த படத்தின் 80 சதவீத வேலைகள் முடிவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment