பழைய படத்தின் கதையை பாலிஷ் செய்து மாபெரும் வெற்றியடைந்த 6 திரைப்படங்கள்.! ஆள் அவர்தான் ஆனா அவரு போட்டுள்ள சட்டை என்னுடையது கவுண்டமணி செந்தில் கதைதான்.!

தமிழ் சினிமாவில் தற்பொழுது பல இயக்குனர்கள் புதிதுபுதிதாக கதைகளை வைத்து படங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார்கள். அதிலும் ஒரு சில இயக்குனர்கள் ஒரே கான்செப்ட்டை வைத்து படங்களை இயக்கி வருகிறார்கள். அதுவும் பழைய திரைப்படங்களின் கதையை  பட்டி டிங்கரிங் பார்த்து சில திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்கள் அது என்னென்ன திரைப்படங்கள் என்பதை இங்கே காணலாம்.

சபாஷ் மீனா மற்றும் உள்ளத்தை அள்ளித்தா- சபாஷ் மீனா திரைப்படத்தில் ஆள் மாறாட்டமாக நடித்திருந்தார்கள்  அதாவது சிவாஜி சந்திரபாபு மாதிரியும் சந்திரபாபு சிவாஜியாகவும் ஆள்மாறாட்டம் செய்து நடித்திருப்பார்கள்.

இந்த திரைப்படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் எடுத்திருந்தார்கள் அதாவது கவுண்டமணி இடத்தில்  நவரச நாயகன் கார்த்திக் ஆள்மாறாட்டம் செய்து  நடித்திருப்பார் அதேபோல் நவரசநாயகன் இடத்தில் ஆள்மாறாட்டம் செய்து கவுண்டமணி நடித்திருப்பார்.

ullathai allitha 3
ullathai allitha 3

எமனுக்கு எமன், லக்கி மேன் – இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே மாதிரி தான் எடுக்கப்பட்டது எமனுக்கு எமன் திரைப்படத்தில் எமனாக தேங்காய் சீனிவாசனும் சித்ரகுப்தன் ஆகவும் நடித்திருந்தார். அப்படிதான் லக்கிமேன் திரைப்படத்தில் கவுண்டமணி எமனாகவும் செந்தில் சித்திரகுப்தன் ஆகவும் நடித்திருப்பார். இந்த இரண்டு திரைப்படமும் ஒரே மாதிரி கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டது.

பாண்டியன் – போக்கிரி:  ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே கான்செப்ட் தான். பாண்டியன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதிரிகளை கொள்ளும் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதேபோல் போக்கிரி திரைப்படத்தில் விஜய் மறைமுகமாக எதிரிகளைக் கொல்லும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் இந்த இரண்டு திரைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது அது என்னவென்றால் இரண்டு பேரும் போலீஸ் என்பது கடைசியாக தான் தெரியவரும்.

pokkiri
pokkiri

நாம் பிறந்த மண் மற்றும் இந்தியன் :   நாம் பிறந்த மண் திரைப்படத்தில் சிவாஜி தன்னுடைய மகனாக நடித்த கமல்ஹாசன் அவர்கள் தவறு செய்வதால் அவரைக் கொன்று விடுவார் அதேபோல்தான் இந்தியன் திரைப்படத்திலும் அப்பாவாக நடிக்கும் கமலஹாசன் மகனாக நடிக்கும் கமலஹாசன் தவறு செய்வதால் அவரை கொன்றுவிடுவார் இதுதான் இரண்டு திரைப்படங்களுக்கும் உள்ள ஒற்றுமை.

உள்ளே வெளியே- அயோக்கியா: இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது உள்ளே வெளியே திரைப்படத்தில் பார்த்திபன் எதிரிகளிடம் பணத்தை வாங்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் கடைசியில்தான் திருந்துவார். அப்படித்தான் அயோக்கியா திரைப்படத்தில்  விஷால் அவர்களும் முதலில் எதிரிகளிடம் பணத்தை வாங்கிக் கொள்வார் பின்பு கடைசியாக திறிந்தி விடுவார்.

சிட்டிசன்-சாமுராய்:  அதே போல் இந்த இரண்டு திரைப்படங்களிலும் சமுதாயத்தில் தவறு செய்யும் அதிகாரிகளை கடத்திச்சென்று தண்டனை கொடுப்பார்கள். சிட்டிசன் திரைப்படத்திலும் சாமுராய் திரைப்படத்திலும் ஒரே கான்செப்ட் தான்.

citizen-and-jilla
citizen-and-jilla

இந்த திரைப்படங்களை தவிர ஏய் மற்றும் வேதாளம், பாஷா மற்றும் ஜனா ஆகிய திரைப்படங்களும் இது போல் ஒரே கான்செப்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தான்.

Leave a Comment