முககவசம் அணியாமல் அடங்காமல் சுற்றிவருபவர்களுக்கு கலக்டர் போட்ட அதிரடி உத்தரவு.! இனி ஆப்புதான்

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா கடந்த இரண்டு வாரங்களாக தான் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டு அதிர்ச்சி ஆகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 4,985 பேருக்கு கோரணா உறுதியாகியுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1,75,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 3,861 பேர் குணமடந்துள்ளனர். இந்த நிலையில் 2,551ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பல தடைகளும், புதிய சட்டங்களும் கொண்டுவரப்பட்டு வருகிறது. இதற்காக அரசு முடிந்தவற்றை மக்களை காப்பாற்ற போராடி வருகின்றார்கள் முக்கியமாக டாக்டர்கள் தான் மக்களுக்காக இரவு,பகல் என்று பார்க்காமல் உழைத்து வருகின்றனர்.

இந்த அந்த வகையில் உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக சில அறிவிப்புகளை தெரிவித்துள்ளார் அது என்னவென்றால் முக கவசம் அணியாதவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என்றும், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,பொது இடங்களில் எச்சில் துப்பினால்  ரூபாய் 1000 அபராதம் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

mask
mask

Leave a Comment