2023-ல் லோகேஷ்க்கு போட்டியாக களம் இறங்கும் 6 மிரட்டல் திரைப்படங்கள்..! லோகேஷன் யுனிவர்ஸ் வேலைக்கு ஆகுமா..?

ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு திரைப்படங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் இந்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கும் ஆறு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது அந்த வகையில் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே பெரிய சேல் 500 கோடியை எட்டியதால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவு உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் வெளியாக போகும் பிரம்மாண்ட திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

ஜெய்லர்  இந்த திரைப்படத்தினை பிரபல சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருவது மட்டும் இன்றி நெல்சன் திலீப்குமார் அவர்கள் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருவது மட்டுமில்லாமல் மோகன் லால் சிவராஜ்குமார் சுனில் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் 50 சதவீத படப்பிடிப்பு தற்பொழுது முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 சுமார் பல வருடங்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் சங்கர் சில விபத்தின் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார் ஆனால் தற்பொழுது மீண்டும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்த நிலையில் படபட விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் கமல் காஜல் அகர்வால் சித்தார்த் ரகுல் ப்ரீத் பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.

ஏகே 62 இந்த திரைப்படத்தை முதன்முதலாக விக்னேஷ் சிவன் அவர்கள் தான் இயக்குவதாக கூறப்பட்டது ஆனால் இதிலிருந்து விலகியதாகவும் தற்பொழுது தல 62 திரைப்படத்தை வேறு ஒரு இயக்குனர் இயக்கப் போவதாகவும் பேசப்படுகிறது இந்த வகையில் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தல அஜித் நடிக்கும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.

தளபதி 67 தளபதி விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல திரை உலக பிரபலம் நடிப்பது மட்டுமில்லாமல் இதில் மன்சூர் அலிகான் அர்ஜுன் கௌதம் மேனன் சஞ்சய் விஜய் சேதுபதி போன்ற பல்வேறு வில்லன்கள் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது இந்த திரைப்படம் மிகப்பெரிய கேங்ஸ்டர் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிவாசல் சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் முதன்முதலாக இணையுள்ள இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டு மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தின் தலைப்பு வாடிவாசல் என்ற காரணத்தின் மூலமாக எளிதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டார்கள் மேலும் இந்த திரைப்படத்தை கலைபுலி தானு அவர்கள் தயாரிப்பது மட்டுமில்லாமல் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் 2  இவ்வாறு உருவாகும் மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது அந்த வகையில் முதல் பாகமே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அவளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த திரைப்படத்திலும் மிகப்பெரிய திரையுலகப்பட்டாலுமே நடித்துள்ளார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment