லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இடத்தை பிடிக்க சைலண்டாக வேலை பார்க்கும் 6 நடிகைகள்.! லிஸ்ட்ல உங்க பேவரைட் ஹீரோயின் இருக்காங்க..

தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களான சரத்குமார், ரஜினி, விஜய், அஜித், சிம்பு, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தற்போது நயன்தாரா தமிழை தாண்டி பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியதால் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி தமிழ் சினிமா ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளவர் நயன்தாரா.

இந்தநிலையில் தமிழில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் இடத்தை பிடிக்க 6 கதாநாயகிகள் போட்டி போட்டு வருகின்றனர். அந்த நடிகைகள் யார் யார் என்பதை பார்ப்போம். பிரியங்கா அருள் மோகன் : இவர் தெலுங்கு கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து அறிமுகமானவர் பின்பு தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களை தமிழில் கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மாளவிகா மோகனன் : இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் பின்பு விஜயின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து காணப்பட்டார். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது சில டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி ஷெட்டி : இவர் தெலுங்கு மொழி படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது சூர்யாவின் 41வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜா ஹெக்டே : இவர் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வந்தவர். பின்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி குயினாக வலம் வருகிறார். மேலும் இவருக்கு தற்போது தமிழ் படங்கள் சில வந்தவண்ணம் இருக்கின்றன.

ராஷ்மிகா மந்தனா : இவர் தெலுங்கு மலையாள மொழி படங்களில் நடித்து அறிமுகமானவர் பின்பு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தளபதி 66” படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். மேலும் இவர் பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் : இவர் தொலைக்காட்சி மூலம் அறிமுகமாகி பின்பு சினிமாவில் வருடத்திற்கு ஆறு எழு திரை படங்களில் கமிட்டாகி நடித்து மிக வேகமாக வளர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment