கல்யாணத்துக்கு பின் நடிப்பை நிறுத்திய 6 நடிகைகள்.. அந்த பக்கமே திரும்ப மாட்டேன் என் கூறும் இளம் நடிகை

0
shalini-
shalini-

நடிகைகள் அழகாக இருக்கும் போதே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் அதை தவறவிட்டால் அவ்வளவு தான்.. அதேசமயம் நடிகைகள் 35 வயதிற்கு பிறகு தான்  திருமணம் செய்து கொள்ளவார்கள். ஆனால் ஒரு சிலர் காதல் அல்லது சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு பட வாய்ப்பு வேண்டாம் என கிளம்பி விடுகிறார்கள் அப்படிபட்ட 6 நடிகைகளை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

1. அசின் : தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து பெரிய அளவில் வெற்றி கண்டார். மேலும் சூர்யா, விஜய், அஜித் உடன் அடுத்தடுத்த படம் பண்ணி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த சமயத்தில் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக முழுக்கு போட்டுவிட்டு தனது குடும்பம் குழந்தையுடன் பொழுதை கழித்து வருகிறார்.

2. எமி ஜாக்சன்  : ஆர்யா நடிப்பில் உருவான மதராசபட்டினம் படத்தின் மூலம் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு ரஜினியின் 2.0, விக்ரமின் ஐ என அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவர் திடீரென சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டார்.

3. சாயிஷா : தெலுங்கு சினிமாவில் பிரபலமடைந்த இவர் தமிழில் வனமகன் படத்தின் மூலம்  என்ட்ரி கொடுத்தார் பின் கஜினிகாந்த், கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இப்போ வாய்ப்புகள் வந்தாலும் தற்போது குழந்தையை பார்த்துக் கொள்வது மற்றும் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார்.

4. ஷாலினி : 90 காலகட்டத்தில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து மிகப்பெரிய அளவில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டவர். இவர் நடித்த காதலுக்கு மரியாதை, அமர்க்களம் போன்ற படங்கள் பெரிய அளவில் பேசப்படுகிறது இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் நடிகர் அஜித் குமாரை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தையே பார்த்து வருகிறார்.

5. நஸ்ரியா : தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகை என்ற பெயரை பெற்றார். இவர் நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படம்  பலருக்கு பிடித்த திரைப்படம் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் பிரபல நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு தற்பொழுது முழுக்கு போட்டு உள்ளார்.

6. ஜெனிலியா : 2000 காலகட்டத்தில் கொடிக்கட்டி பறந்தார். இவருடைய துள்ளலான நடிப்பு மற்றும் நடனம் போன்றவை பலருக்கும் பிடித்தது. தொடர்ந்து தமிழ் தெலுங்கில் பிஸியாக வந்த இவர் பாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.