கருப்பாக இருந்தாலும், முகபாவனை இல்லாமல் இருந்தாலும் திறமையை நம்பி ஜெயித்து காட்டிய 6 நடிகர்கள்…

ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை அதில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் கட்டாயம் அழகாக இருக்கப்பட வேண்டும் என்று ஒரு கட்டாய விதி இந்திய சினிமாவில் உள்ளது. அழகையும் முகபாவனையும் இல்லாமல் தனது தனித்துவமான திறமையின் மூலம் நடித்து பல சாதனைகளை படைத்த ஆறு நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ராஜ்கிரன் :- 1999 ஆம் ஆண்டு என்ன பெத்த ராசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ராஜ்கிரன். இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு மூஞ்சா இவ்கறேல்லாம் விளங்கவே மாட்டார் என்று பலர் விமர்சித்த நிலையில் அதையெல்லாம் ஒரு நான்கு ஐந்து படங்களிலேயே அடித்து தொம்சம் செய்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு தனது தனித்துவமான நடிப்பை வெளிகாட்டி தற்போது வரையிலும் ரசிகர்களை கலந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அது மட்டுமல்லாமல் தற்போது வரை ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தியாகராஜன்:- இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட தியாகராஜன் தமிழ் சினிமாவில் பூவுக்குள் பூகம்பம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் அறிமுகமான புதிதில் ரசிகர்களிடம் கடுமையான விமர்ச்சனத்தை பெற்று வந்தார் ஆனால் பிற்காலத்தில் இவரது நடிப்பை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் கூட்டமாக இவருடைய திரைப்படங்களை சென்று பார்த்தனர்.

டி ராஜேந்திரன் :- ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் கௌரவத் தோற்றம் அளித்த நடிகர் டி ராஜேந்திரன் பிற்காலத்தில் பல திரைப்படங்களில் நடிகராக நடித்தார். மேலும் அவரது மகன் சிலம்பரசன் என்கிற சிம்பு அவர்கள் ஹீரோவாக நடிக்கின்ற காலத்திலும் நடிகர் டி ராஜேந்திரன் அவர்களும் ஒரு சில திரைப்படங்களில் நடிகராக நடித்தார். இவருடைய திரைப்படங்கள் வசனங்களுக்கும்  இன்று வரை ரசிகர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.

பார்த்திபன்:- நடிப்பதற்கு நிறம் ஒன்றும் அவசியம் இல்லை என்பதை நிரூபித்த சூப்பர் ஸ்டார் மற்றும் விஜயகாந்த் இவர்களைப் போல நடிகர் பார்த்திபன் அவர்களும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அது மட்டுமல்லாமல் இவர் படங்களில் பேசும் குண்டக்க மண்டக வசனங்கள் இன்று வரைக்கும் ரசிகர்களுக்கு பிடித்ததாக உள்ளது.

பாண்டியன்:- மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பாண்டியன் வில்லனாகவும், ஹீரோவாகவும், துணை நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் 75 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முரளி:- நடிகர் என்ற எந்த ஒரு வரையரையும் இவரது முகத்தில் பார்க்க முடியாது கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார் என்று சொல்வதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார். அது மட்டுமல்லாமல் வெற்றி கொடி கட்டு என்ற திரைப்படத்தில் வைரமுத்து அவர்கள் எழுதிய கருப்புதான் எனக்கு பிடித்த கலர்  என்ற பாடல் நடிகர் முரளியை வர்ணிக்கும் விதமாக வரிகள் இடம் பெற்று இருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர் பக்கம் இருந்தார்கள் ஆனால் நடிகர் முரளி தனது 46வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு ஒரு பேரிழப்பாக பார்க்கப்பட்டது.

Leave a Comment