விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தனக்கென ஒரு நபர் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார், அதேபோல் இவரின் படத்திற்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும். என்றால் இவர் திரைப்படத்தில் தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார்.
இந்த நிலையில் இவர் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது, படத்தை ராஜேஷ் செல்வா தானே இயக்கி இருக்கிறார், படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்த திரைப்படத்தை கமலஹாசன் தயாரித்துள்ளார் மேலும் அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விக்ரம் எப்பொழுதும் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடிப்பார், அவரின் கெட்டப் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும், இந்த நிலையில் புதிய கெட்டப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரம் இன்னும் இளமையாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.



