பாலிவுட் சினிமாவிற்கு நிகராக 500 கோடி வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்.

இந்திய சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றியோ தோல்வியோ என்பதை அதன் வசூலை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது அந்த வகையில் பல திரைப்படங்கள் ஒரு வருடத்தில் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பு பெற்று நல்ல வசூலையும் பெற்று வெற்றி லிஸ்டில் இணைந்து விடுகிறது.

அதேபோல் சினிமாவில் நாம் எதிர்பார்க்கும் வசூலை விட அதிக வசூல் கடந்து விட்டால் அந்தத் திரைப்படத்தினை மாபெரும் வசூல் சாதனையாக திரை உலகில் பார்க்கப்படுகிறது ஒரு காலத்தில் 50 கோடி வசூல் செய்து விட்டால் அதனை பெரிதளவில் கொண்டாடுவார்கள் அந்த அளவு 50 கோடி என்பது மிகப்பெரிய வசூலாக கருதப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காலப்போக்கில் நூறு கோடி வசூல் கடந்து விட்டால் அந்த திரைப்படத்தை பெரிதாக கொண்டாடி வருவார்கள் சினிமாவில் ஆனால் சமீப காலமாக 100 கோடி என்பது மிகச் சிறிய அளவு வசூல் தான் என பலரும் கூறி வருகிறார்கள். கடந்த சில வருடங்களாகவே ஒரு சில திரைப்படங்கள் 500 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றியை நிலைநாட்டி வருகிறது

அண்மை காலமாக வெளியேறும் திரைப்படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகின்றன அதனால் 500 கோடி தாண்டி வசூல் செய்து வருகிறது அந்த லிஸ்டில் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் 500 கோடி வாசனை ஈட்டியது அதனை தொடர்ந்து தற்பொழுது வரை பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 500 கோடி வசூல் செய்த மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்த நிலையில் 500 கோடி வசூலை கடந்த ஒரு சில திரைப்படங்களின் லிஸ்டை இங்கே காணலாம்.

அந்த வகையில் பாகுபலி முதல் பாகம், 2.0, பாகுபலி இரண்டாவது பாகம் ஆர் ஆர்  ஆர், கே ஜி எஃப் 2,  பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் அதிகரித்து உள்ளதால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெளியாகும் பொன்னியின் செல்வம் இரண்டாவது பாகம் மாபெரும் வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment