50 நாள்தான் கால்ஷீட் தளபதி 65 திரைப்படத்திற்கு பிரபல காமெடியன் கொடுத்த கெடு.! யார் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனைத்தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று தான் நடந்து முடிந்தது.

இதனைத்தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் இரண்டு நாட்கள் படப்பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கோபுரம் ஸ்டூடியோவில் போட்டுள்ள செட்டில் தளபதி 65 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் காட்சி படமாக்க உள்ளார்களாம்.

நேற்று பூஜையில் கலந்துகொண்ட விஜய்யின் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது அதில் இதுவரையும் இல்லாத அளவிற்கு பரட்டை தலையுடன் டிஃபரண்டான ஸ்டைலில் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இத்திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

மேலும் இவரை தொடர்ந்து அபர்ணா தாஸ் என்பவரும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பிக்பாஸ் பிரபலம் கவின் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இவர்களை தொடர்ந்து தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் யோகி பாபு. இவர் விஜய்யின் ஃபேவரட்டான காமெடி நடிகரும் ஆவார். தற்பொழுது யோகிபாபு  தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

vijay-yogibabu
vijay-yogibabu

அந்த வகையில் இத்திரைப்படத்தின் இயக்குனரான நெல்சன் யோகி பாபுவிடம் இத்திரைப் படத்தில் நடிப்பதற்காக இதுவரையிலும் கிட்டத்தட்ட 50 நாட்கள் கால் சீட்டுகள் வாங்கியுள்ளாராம்.

அந்த வகையில் தற்போது யோகி பாபு ஒரு திரைப்படத்தில் ஒரு நாள் மட்டும் நடிப்பதற்காக 3 முதல் 5 லட்சம் வரை சம்பளம் வாங்கிய வருகிறாராம். தற்பொழுது இவர் தளபதி 65 திரைப்படத்திற்கு இரண்டு மடங்கு அதிக சம்பளம் வாங்குவார் என்று கூறப்படுகிறது.