தனது வில்லத்தனமான நடிப்பின் மூலமாக தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்த 5 வில்லன் நடிகர்கள்..!

villans
villans

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது அந்த வகையில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் மற்றும் நடிப்புத் திறனைப் பற்றி பேசுவது சமூக வலைதளப் பக்கத்தில் ஏராளமாக உள்ளது அந்த வகையில் தன்னுடைய பிரமாண்ட நடிப்பின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த வில்லன்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

மன்சூர் அலிகான் இவர் கேப்டன் விஜயகாந்த் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருப்பார் இந்த திரைப்படத்தினை ஆர்கே செல்வமணி இயக்கிய அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜயகாந்துடன் சரத்குமார் ரம்யா கிருஷ்ணன் போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்திருப்பார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் மன்சூரலிகான் பேசும் பேச்சும் நடிக்கும் நடிப்பும் ரசிகர்களால் மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது

நடிகர் நாசர் இவருடைய நடிப்பில் பிரமிக்க வைத்த திரைப்படம் என்றால் அது தேவர்மகன் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் நாசர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ரேவதி சிவாஜி போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்திருப்பார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் இவருடைய அசத்தலான நடிப்பு இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாமல் போய்விட்டது.

நடிகர் ரகுவரன் தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறனை காட்டிய நடிகர் ஆவார் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பாட்ஷா என்ற திரைப்படத்தில் நடித்தது யாராலும் மறக்க முடியாது இந்த திரைப்படத்தில் ரகுவரன் மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நடிகர் பொன்னம்பலம் இவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை என்ற திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் இவருடைய நடிப்புத்திறன் பலரையும் மிரட்டியது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களிலும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

மொட்ட ராஜேந்திரன் இவர் நான் கடவுள் திரைப்படத்தில் தாண்டவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அந்த வகையில் இவர் ஈவுஇரக்கமின்றி இந்த திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்தது மட்டும் இல்லாமல் அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல்வேறு காமெடி கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.