விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை சல்லி சல்லியாக உடைத்த 4 வில்லன் நடிகர்கள்.! மக்கள் மனதில் நிற்கும் வர்மன்

Vijay sethupathi : ஹீரோவுக்கு நிகராக வில்லன்களையும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில்  தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லனாக நடித்து மார்க்கெட்டை உயர்த்தி உள்ளவர் விஜய் சேதுபதி இவருக்கு தமிழை தாண்டி பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது இவர் நடித்த ஜவான் படத்தில் கூட வில்லனாக மிரட்டி இருந்தார் ஆனால் அவரது இடத்திற்கு தற்போது பலர் போட்டியாக இருக்கின்றனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

அர்ஜுன்  : தேசப்பற்று சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த ஆக்சன் கிங். இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து வில்லனாகவே மிரட்டி வருகிறார். இரும்புத்திரை படத்தில் வில்லனாக மிரட்டினார் அதனைத் தொடர்ந்து லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவருடைய வில்லத்தனத்தை ரசிகர்கள் தற்பொழுது காத்து கொண்டு வருகின்றனர்.

மிஸ்கின் : வித்தியாசமான கதைகளை இயக்கி வந்த மிஷ்கின் தொடர்ந்து நடிப்பிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் சின்ன சின்ன படங்களில் வில்லனாக நடித்து வந்த இவர் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது கதாபாத்திரத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விநாயகன் : மலையாள நடிகரான இவர் தென்னிந்திய சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரம் வில்லனாக நடிப்பதில் இவர் ரொம்பவும் கைதேர்ந்தவர் விஷாலின் திமிரு திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் அதனை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் வர்மன் என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டு போனார். அதன் பிறகு தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார்.

எஸ் ஜே சூர்யா  : நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து வெற்றி கண்டு வந்த எஸ் ஜே சூர்யா இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பத்தில் இருந்து வில்லனாக அதிகம் நடித்து வருகிறார் இவர் தேர்ந்தெடுத்துக் நடிக்கும் வில்லன் ரோல் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் வாங்கி வருகிறது. மார்க் ஆண்டனி  படத்தில் கூட தனது முழு திறமையை வெளிப்படுத்தினார் அதனை தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் பல டாப் ஹீரோக்களின் படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார்.